
கரைச்சி பிரதேச சபையின் சமத்துவக் கட்சியின் உறுப்பினர் இ. இளங்கோ
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியான சூழலில்
அதிககரித்துள்ள பொருட்கள் சேவைகள் விலையேற்றம் காரணமாக மக்கள் தங்கள்
வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியாத நிலையில் உள்ள போது ஆதனவரியை
செலுத்துமாறு கரைச்சி பிரதேச சபை அழுத்தம் கொடுப்பது மக்களை மேலும்
நெருக்கடிக்குள் உள்ளாக்குவதாகும் எனவே இச் செயற்பாட்டினை நிறுத்துமாறு
கரைச்சி பிரதேச சபையின் சமத்துவக் கட்சியின் உறுப்பினர் இ. இளங்கோ
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது
கரைச்சி பிரதேச சபையில் அதிகரித்த ஆதன வரி தொடர்பில் நாம் தொடர்ந்தும்
எமது ஆட்சேபனையையும், எதிர்ப்பினையும் தெரிவித்து வருகின்றோம். கரைச்சி
பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மக்களில் ஒரு குறிப்பிட்ட சொற்ப சதவீத
மக்களை தவிர பெரும்பாலானவர்கள் பொருளாதாரத்தில் மேம்பாடுடையவர்களாக இல்லை
எனவே மக்கள் அவ்வாறான நிலையில் இருக்கும் போது அந்த மக்களிடம் ஆதனவரியை
செலுத்துமாறு நிர்ப்பந்தம் செய்வதும் இக் கால சூழலில் மிகவும்
பொருத்தமற்ற செயற்பாடு. மூன்று வேளை உணவுக்கே தினமும் போராடுகின்ற
நிலையில் மக்கள் உள்ள போது அவர்களை நாமும் நெருக்கடிக்குள் தள்ளவிடக்
கூடாது எனத் தெரிவித்த அவர்
நாட்டில் தற்போது அனைத்து வரிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிய புதிய
வரிகள் மக்கள் மீது சுமத்தப்பட்டுவருகிறது இந்த நிலையில் கரைச்சி பிரதேச
சபையும் தனது அதிகரித்த ஆதனவரியை செலுத்துமாறு மக்களை நிர்ப்பந்தம்
செய்வதனை நிறுத்த வேண்டும் எனவும் கோகரிக்கை விடுத்துள்ளா் பிரதேச சபை
உறுப்பினர் இளங்கோ.