பொருளாதார நெருக்கடிகளை தவிர்க்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் 2.5 மில்லியன் வழங்க  தீர்மானித்துள்ளது

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் மூலம் இலங்கைக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இலங்கை-அவுஸ்திரேலியா கிரிக்கெட் தொடரின் ஆரம்பம் தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயலாளர் மேலும் உரையாற்றுகையில், இலங்கையில் அமெரிக்க டொலர் கையிருப்பு குறைவாக உள்ள வேளையில் அவுஸ்திரேலிய அணியின் இலங்கை விஜயம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பலமானதாக அமையும்.

எனவே, இந்த போட்டிக்கான அனுமதிச்சீட்டு விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தையும் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் மக்களுக்காக செலவிடும் நோக்கில் விளையாட்டு துறை அமைச்சிடம் ஒப்படைப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்