
பொன்னியின் செல்வன் பட முதல் பாடல் உருவான விதம் குறித்த விடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.
கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா, ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம், பழுவேட்டையராக சரத்குமார், சின்ன பழுவேட்டையராக பார்த்திபன், சுந்தரசோழனாக பிரகாஷ் ராஜ், பூங்குழலியாக ஐஸ்வர்யா லக்ஷ்மியும் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியகும் என்று அறிவித்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் உருவான விதத்தை விடியோவாக வெளியிட்டுள்ளார்.