பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் பேரணி நாளை முல்லைத்தீவு

may 18

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட இனஅழிப்பின் மிக முக்கிய தடமாகவுள்ள முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 13வது நினைவு ஆண்டை முன்னிட்டு பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையில் முன்னெடுக்கப்படும் பேரணியானது இன்று மட்டக்களப்பிலிருந்து ஆரம்பமானது.

இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்புக்கு நீதியைப்பெற்றுக்கொடு என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் இந்த பேரணியானது நேற்று மாலை மட்டக்களப்பினை வந்தடைந்த அதேநேரம் இன்று காலை திருகோணமலை நோக்கி நடைபேரணி நடைபெற்றது.

இன்று காலை கல்லடி பாலத்திற்கு அருகில் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் வேதனைகளை வெளிப்படுத்தும் நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படும் உப்பற்ற கஞ்சி வழங்கப்பட்டு கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து பேரணியானது திருகோணமலை நோக்கி பயணமானது.

வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்த பேரணியில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன் என பலர் கலந்துகொண்டனர்.

பேரணியானது மட்டக்களப்பு நகரை வந்தடைந்து நகர் ஊடாக திருகோணமலை வீதியை சென்றடைந்து திருகோணமலை நோக்கி பேரணி சென்றது.

நாளை திருகோணமலையிலிருந்து முல்லைதீவு சென்று நாளை மறுதினம் முள்ளிவாய்க்கால் பேரணி சென்றடைந்து அங்கு இனஅழிப்பு வார நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்