பொது மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

வேட்பாளர்களின் சின்னம் மற்றும் இலக்கங்கள் பொறிக்கப்பட்ட முகக்கவசங்கள் அணிவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறு பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் ஆராயுமாறு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ்மா அதிபர் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் தொடர்பிலும் பொலிஸார் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்