பொதுத் தேர்தல் எப்போது? சற்றுமுன் வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். பொதுத் தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழு இன்றைய தினம் கூடியிருந்தது.

இதன்போதே குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்ட போதும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீண்ட இழுபறியின் பின்னர் இன்றையதினம் பொதுத் தேர்தலுக்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்