பொதுத் தேர்தலை முன்னிட்டு நாளை முதல் விசேட போக்குவரத்து சேவை!

பொதுத் தேர்தலை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக நாளை (31) முதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

நாளை முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இந்த விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 5,300 பஸ்கள் குறித்த நாட்களில் சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனை தவிர, மாகாணங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து அதிகார சபையிடமுள்ள 600 பஸ்களும் இந்த ​சேவையில் ஈடுபடவுள்ளன.

இதற்காக தற்காலிக போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுப் போக்குவரத்து சேவையில் ஏற்படும் நெரிசல்களை குறைப்பதற்காக இவ்வாறான விசேட போக்குவரத்து சேவை நடவடிக்கைககள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்