
2019 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுக்கு அமைய ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டுள்ளனர். இதற்கு அமைய எதிர்காலத்தில் நடைபெறும் எந்த ஒரு தேசிய தேர்தலிலும் இவர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுக்கு அமைய ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 பேர் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்திருந்தனர். 2019ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் வாக்காளர்களின் சதவீதத்திற்கு அமைய காலி மாவட்டத்திற்கு நாடாளுமன்ற ஆசனம் குறைந்துள்ளது.
இதேவேளை காலி மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 இல் இருந்து 9 ஆக குறைந்துள்ளதுடன் பதுளை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 இல் இருந்து 9 ஆக அதிகரிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.