
ஹட்டனில் இருந்து கொழும்புக்கு பொதிச் சேவை நிறுவனத்தின் ஊடாக அனுப்பப்பட இருந்த 20 எரிவாயு கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் மீட்கப்பட்டுள்ளது.
ஹட்டனில் உள்ள பொதிச் சேவை நிறுவனத்தின் களஞ்சியசாலையில் இருந்து குறித்த எரிவாயு கொள்கலன்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.