பைசருக்காக எல்லை தாண்டும் மக்கள்

நாடு முழுவதும் சைனோபாம் உள்ளிட்ட ஐந்து வகையான தடுப்பூசிகள் ஏற்றப்படும் நிலையில் பைசர் தடுப்பூசியின் மீது காதல் கொண்ட மக்கள் அதனை நோக்கி செல்ல முற்படும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

A girl gets a Pfizer BioNTech COVID-19 vaccine in Bucharest, Romania, Wednesday, June 2, 2021. Romania has started the vaccination campaign for children between the ages of 12 and 15. (AP Photo/Andreea Alexandru)


மக்கள் மத்தியில் சைனோபாம் தடுப்பூசி பற்றிய அவநம்பிக்கை ஊட்டும் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்ற நிலையில் சிறு வீதமானவர்கள் அதனை ஏற்றாது பின்னடிக்கின்றனர். அத்தகையவர்கள் பைசர் தடுப்பூசி ஏற்றப்படும் பிரதேசங்களுக்குச் சென்று அதனைப் பெற்றுக்கொள்ள முற்படுவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றன.


புத்தளம் மாவட்டத்தின் சில பிரதேசங்கள் பைசர் தடுப்பூசி வழங்குவதற்கு தெரிவு செய்யப்பட்டன. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள இக்காலப்பகுதியில் ஏனைய மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு செல்கின்றனர் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்