பேருந்தால் வீழ்ந்து மாணவி விபத்து: சாரதியை தப்பிச் செல்ல விட்ட பொலிசார்


கிளிநொச்சி – பரந்தன், முரசுமோட்டை பகுதியில் பேருந்தில் ஏறமுற்பட்ட பாடசாலை மாணவி வீழ்ந்து விபத்துக்குள்ளானார். மாணவி ஏறுவதற்கு முன்னர் சாரதி பேருந்தை வேகமாக எடுத்ததனால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

எனினும் விபத்தை ஏற்படுத்திய பேருந்துடன் சாரதி தப்பிச் சென்றுள்ளார். அது தொடர்பில் வாதத்தில் ஈடுபட்ட பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் உள்ளிட்ட இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இன்று(07) காலை 7.45 மணிக்கு தனியார் வகுப்புக்கு சென்ற குறித்த மாணவி இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தில் எற முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றது.

இதில் காயமடைந்த மாணவி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலிருந்து பேருந்தினை கொண்டு சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவின் சகோதரர் உட்பட இருவர் விபத்துடன் தொடர்புடைய பேருந்தை துரத்திச் சென்று, வழி மறித்து வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதுடன் சாரதி மற்றும் நடத்துனர்கள் தாக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

சம்பவ இடத்திற்குச் சென்ற தருமபுரம் பொலிஸார் விபத்தினை ஏற்படுத்திய பேருந்தினையும் விபத்தை ஏற்படுத்திய சாரதியையும் உடனடியாகவே விடுவித்துள்ளதுடன் மாறாக பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்