
நாட்டில் நிலவும் நெருக்கடிகள் காரணமாக பேராதனை பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி.லமவன்ச தெரிவித்துள்ளார்.
இதன்படி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அனைத்து கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாணவர் விடுதிகளையும் மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.