
பிரித்தானியாவுடனான பிரெக்சிற் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் பின்னடைவானால் தற்செயல் திட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய விமானம் மற்றும் சாலைப் பயணங்கள் தொடர்ந்து உறுதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இரு தரப்பும் நீர் நிலைகளில் மீன்பிடி அணுகலுக்கான வாய்ப்பையும் அனுமதிப்பது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் (ருசளரடய எழn னநச டுநலநn) ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியிருந்தது.
இந்நிலையில், வரும் டிசம்பர் 31ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக விதிகளைப் பின்பற்றுவதை இங்கிலாந்து நிறுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.