பெஷாவர் சல்மியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பயிற்சியாளரானார் டேரன் சமி

வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் டேரன் சமி பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பெஷாவர் சல்மி அணிக்காக விளையாடி வருகிறார். 2016-ல் இருந்து அந்த அணிக்காக விளையாடி வரும் அவர் 39 போட்டிகளில் கேப்டனாக பணியாற்றியுள்ளார்.

கடந்த 2-ந்தேதி கராச்சி கிங்ஸ் அணிக்கெதிரான ஆடும் லெவன் அணியில் இடம் பெறவில்லை. அந்த போட்டியில் பெஷாவர் அணி தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் டேரன் சமி பெஷாவர் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் உடனடியாக கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.

முகநூலில் நாம்