
பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் முழுவதுமாக அரசியலமைப்பிற்குமுரணானது அல்ல என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.இந்த விடயம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தைநாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனஅறிவித்தார்.மனுக்கள் மீதான விசாரணையின்போது சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பணங்களின்அடிப்படையில் உயர் நீதிமன்றம் சட்டமூலத்தில் சில திருத்தங்களைமுன்மொழிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.பெறுமதி சேர் வரி திருத்த சட்டமூலத்தில் உள்ள சில சரத்துக்கள்அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்கப்பட வேண்டும் என்று கோரி தாக்கல்செய்யப்பட்ட இரண்டு மனுக்களின் விசாரணை முடிவடைந்ததை அடுத்து, தமதுவியாக்கியானத்தை உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிவித்தது.