பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள சம்பவம்..!

சமூக வலைத்தளத்தில் போலியான தகவல் பரவியுள்ளமை காரணமாக இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – செம்மனி – கல்வியன்காடு பிரதேசத்தினை சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் சமூக வலைத்தளம் மூலம் குறித்த இளைஞர் தொடர்பில் போலியான தகவல் பரவியுள்ள நிலையிலே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாவக்கச்சேரி காவற்துறையினால் இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

முகநூலில் நாம்