வெளிநாட்டு பெண்ணை கரம்பிடித்த மதுரை இளைஞர்… இராமேஸ்வரத்தில் டும்டும்டும்.. 2 ஆண்டு காதல் கைகோர்த்த நெகிழ்ச்சி.!

செக் குடியரசில் வேலைபார்த்து வந்த தமிழர், அந்நாட்டு பெண்ணை 2 ஆண்டுகளாக காதலித்து தமிழகத்தில் வைத்து இருதரப்பு சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் காளிதாஸ் (வயது 30). இவரின் தந்தை ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஆவார். காளிதாஸ் ஐரோப்பாவில் உள்ள செக் குடியரசு நாட்டில் பணியாற்றி வந்த நிலையில், கொரோனா காரணமாக ஊருக்கு வந்திருந்தவர் 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்தவாறு பணியாற்றி வருகிறார். 

இவருக்கும் – செக் குடியரசை சார்ந்த ஹானா பொங்குலோவா என்ற பெண்மணிக்கும் இணையம் மூலமாக அறிமுகம் ஏற்பட்டு, ஆன்லைன் வாயிலாக காதல் வயப்பட்டுள்ளனர். இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். 

தங்களின் விருப்பத்தை இருவரும் வீட்டில் தெரிவிக்க, திருமணத்திற்கு இருதரப்பும் பச்சைக்கொடி காண்பித்த காரணத்தால் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற ஏற்பாடுகள் விறுவிறுப்புடன் நடைபெற்றது. காதலனை கணவனாக்க காதலியும் நாடுவிட்டு நாடுவந்து இருவரின் திருமணமும் இராமேஸ்வரம் இராமநாதசாமி கோவில் பத்ரகாளியம்மன் சன்னதியில் வைத்து நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்