பெண்ணொருவரைக் கடத்திய நால்வர் கைது

கப்பம் பெறுவதற்காக பெண்ணொருவரை கடத்திச் சென்று தடுத்து வைத்திருந்த நால்வர், பூவரசன்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் கடத்தப்பட்ட பெண்ணின் மகளுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி,  அவரது தாய் கடத்தப்பட்டுள்ளதாகவும் 5 இலட்சம் ரூபாய் வழங்கினால் விடுவிப்பதாகவும் மிரட்டியுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதற்கமைய, சந்தேகநபர்களுக்கு பணம் வழங்குவது போல் ,கடத்தப்பட்ட பெண்ணின் மகளை அனுப்பி, சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 மற்றம் 49 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் இவர்கள் வ்வுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்