பெண்கள் இரவு வேலை செய்ய அனுமதி

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் பெண்கள் இரவு ஷிப்டில் பணியாற்றும் வகையில் கடை மற்றும் அலுவலக சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பான பிரேரணையை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார சமர்ப்பித்துள்ளார்.

அதன்மூலம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களில் பெண்கள் வெளிநாடுகளின் நேர மண்டலத்திற்கு ஏற்ப வேலை செய்யும் வகையில் கடை மற்றும் அலுவலகச் சட்டம் திருத்தப்படும். 

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் காலை 06.00 மணிக்கு முன்பும் மாலை 06.00 மணிக்குப் பின்னும் வேலை செய்ய இந்தத் திருத்தங்கள் அனுமதி அளித்துள்ளது, முன்னதாக கடை மற்றும் அலுவலகச் சட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டது.

இலத்திரனியல், கணினி மற்றும் தகவல் தொழிநுட்பத் துறையுடன் தொடர்புடைய நிறுவனங்கள் கோரிக்கைக்கு விடுத்துள்ளனர். அதற்கமைய

தனியார் துறையில் பணியாற்றும் பெண்கள் மாலை 6.00 மணிக்கு மேல் வேலை செய்யும் கடை மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

இலத்திரனியல், கணினி மற்றும் தகவல் தொழிநுட்பத் துறையுடன் தொடர்புடைய நிறுவனங்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று  (09) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்