
நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்
வகையில் கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக
ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியினர் முன்னெடுத்துள்ளனர்.
இதில் பெண்கள் செம்மஞ்சள் நிற உடை மற்றும் செம்மஞ்சள் நிற பட்டி தலையில்
அணிந்து, செம்மஞ்சள் நிற கொடிகளை ஏந்திய வண்ணம் பலர் கொண்டுள்ளனர்.
இதேவேளை இப்பகுதியில் பெருமளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.