பூரண பாதுகாப்புடன் இரு டோஸ்களையும் ஏற்றிய கர்ப்பிணிகள்

இலங்கையில் கொரோனாவுக்கு எதிரான இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்கின்றனர். இதனை இலங்கையின் சுகாதாரத் தரப்பு நேற்று உறுதி செய்தது. 


இதுவரையில் மரணித்துள்ள கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் ஏற்றிக்கொள்ளாதவர்கள் எனவும் அத்தகவல் மேலும் தெரிவிக்கின்றது. ஒரு டோஸ் மாத்திரம் ஏற்றிக்கொண்டவர்களும் எந்தவொரு கொரோனா தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொள்ளாதவர்களுமே உயிரிழந்துள்ளனர்.


இன்றுவரை இலங்கையில் 68 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இரண்டு டோஸ்களையும் ஏற்றிக்கொண்டுள்ளனர். அவர்களின் நோய்த்தொற்று வீதம் மிகக் குறைவானதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்