
ஒற்றையாட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் வாழும் தமிழ்
மக்களுக்கு பூரண அதிகாரப் பகிர்வை வழங்க சிங்கள மக்கள் எப்போது
அனுமதிக்கின்றார்களோ அன்றே தமிழ் மக்களின் விடிவு நாள் என
சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஒற்றையாட்சி மூலம் சிங்களப் பெரும்பான்மையினர் பெற்ற அரசியல் ஆதிக்கத்தை
கடந்த 75 ஆண்டுகளாக சிங்கள அரசியல்வாதிகள் கட்டிக்காத்து வருகின்றனர்
என்றும் அவர்கள் தந்திரங்களை கையாண்டு இதனை பெற்றுக்கொண்டனர் என்றும்
குற்றம் சாட்டியுள்ளார்.
வருடந்தோறும் பெப்ரவரி 4 ஆம் திகதி கரிநாள் என்றும் இம்முறையும்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவ ஒன்றியமும் கிழக்கு பல்கலைக்கழக
மாணவர்களும் கரிநாளாக அடையாளப்படுத்தியுள்ளனர் என்றும்
குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர் யுவதிகளின் பேரணியை வரவேற்கும் அதே நேரத்தில் அவர்கள் பயணம்
பாதுகாப்புடனும் பொறுப்புடனும் வெற்றியுடனும் நடந்தேற வேண்டும் என்றும்
சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.