பூநகரியில் விவசாய நிலங்களுக்குள் கடல் நீர் உட்புகுந்துள்ளது

பூநகரியில் விவசாய நிலங்களுக்குள் கடல் நீர் உட்புகுந்துள்ளமையால்
விவசாய நடவடிக்கைள் பாதிக்கப்பட்டுள்ளன

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சூரமுனங்கு பகுதியில்
உள்ள பல ஏக்கர் வயல் நிலங்கள் கடல் நீர் உட்புகுந்ததன் காரணமாக
பாதிக்கப்பட்டுள்ளதாக. விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

வயலில் நெல் விதைத்து மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில் கடல்
நீரானது வயல்களுக்கு உட்புகுந்தமையால் நெல் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக
விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.குறித்த பகுதியில் உவர் தடுப்பணையொன்று
காணப்படுகிறது. அந்த அணை கட்டுகள் புணரமைப்பு இன்றி கதவுகள் இன்றிய
நிலையில் காணப்படுவதனால் கடல் நீல் இலகுவாக உட்புகுந்துள்ளது.

தடுப்பணை சீராக இருக்குமாக இருந்தால் கூட இந்த பெருக்கை தடுத்திருக்க
முடியும் எனவும் விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.கிளிநொச்சி மாவட்டத்தில்
மழை வீழ்ச்சி இம்முறை இதுவரை கிடைக்காதன் காரணமாக விவசாயிகள் மழையை
எதிர்பார்த்து காத்திருக்கின்ற நேரத்தில் கடல் நீரானது வழமைக்கு மாறாக
பெருக்கெடுத்து விவசாய நிலங்களுக்குள் உட்புகுந்தமையால் விவசாய
நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன.

கடந்த சில நாட்களாக பூநகரியின் கரையோக கிராமங்கள் சிலவற்றுக்குள் கடல்
உட்புகுந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்