பூநகரியில் வரும் திங்கள் 12 மணித்தியாலய நீர் வெட்டு

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  கிராமங்களில் வரும் 20.06.2022 திங்கள் கிழமை 12 மணித்தியாலய நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக கிளிநொச்சி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் அறிவித்துள்ளனர்.

 பூநகரி வாடியடிச் சந்தியில் அமைந்துள்ள நீர்த் தாங்கியில்
மேற்கொள்ளப்படவுள்ள திருத்தம் மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கள் கிழமை மாலை 6 மணி முதல் மறு நாள் செவ்வாய் கிழமை(21) காலை 6 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

எனவே பொது மக்கள் இதனை கருத்தில் கொண்டு முன்னாய்த்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுள்ளனர் தேசிய
நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்