புலம்பெயர் தொழிலாளர்களை காப்பாற்றுவோம் – ராய் லட்சுமி!

நாடு முழுக்க புலம்பெயர் தொழிலாளர்களைப் பற்றிய செய்தி மனத்தை உலுக்குகிறது. இந்நிலையில் நடிகை ராய் லட்சுமி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்து அவர்களைக் காப்பாற்றுவோம் என்று கூறியுள்ளார்.

அவர்களைப் பற்றி வீடியோவை பதிவிட்ட ராய் லட்சுமி “இயற்கையின் கோபம். கடவுள்தான் உலகைக் காப்பாற்ற வேண்டும். இனி இதையெல்லாம் பார்க்க முடியாது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்து அவர்களைக் காப்பாற்றுவோம். இந்தக் கடுமையான காலமும் நம்மைவிட்டுக் கடந்து போகும். விரைவில் நல்ல காலம் பிறக்கும் என்று நம்புவோம்” என்று வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.

முகநூலில் நாம்