புனித ஹஜ் பெருநாள் ஆகஸ்ட் முதலாம் திகதி!

புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி சனிக்கிழமை கொண்டாடுவதற்கு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு தீர்மானித்துள்ளது.

துல்ஹஜ் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ​நேற்று (21) மாலை மஃரிப் தொழுகையின் பின்னர் நடைபெற்றது.

இதன்போது துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தென்படாத காரணத்தினால் துல்கஃதா மாதத்தை 30 நாட்களாக பூர்த்திசெய்வதுடன், துல்ஹஜ் மாதத்தை நாளை (23) முதல் ஆரம்பிப்பதற்கு பிறைக்குழு தீர்மானித்துள்ளதாக பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

முகநூலில் நாம்