
புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தை அரகலயவில் ஈடுபட்டவர்களை இலக்குவைத்து
உருவாக்கவில்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரகலயவில் ஈடுபட்டவர்களை
இலக்குவைத்து அவர்களை தண்டிப்பதற்கு அரசாங்கம் முயல்கின்றது என சிலர்
கருத்துவெளியிட்டுள்ளனர் . எனினும் அவ்வாறான நோக்கம் எதுவுமில்லை என
அமைச்சர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்திற்கு பிந்தைய காலகட்டத்தில் நபர்களை புனர்வாழ்விற்கு
உட்படுத்துவதற்கான கட்டமைப்பு எதுவும் இருக்கவில்லை இதன் காரணமாக
நபர்களை புனர்வாழ்விற்கு உட்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கு
அரசாங்கம் முயல்கின்றது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.