
திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் அவரின் சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது.
தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து தமிழில் ஜெகமே தந்திரம், மாறன், ஹிந்தியில் அந்த்ராங்கி ரே மற்றும் ஹொலிவுட்டில் தி கிரே மேன் ஆகிய படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்றன.
தற்போது திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி முந்தைய படங்களை விட அதிக வரவேற்பு பெற்று வசூலை குவித்து வருகிறது.
இதுவரை ரூ.20 கோடி சம்பளம் வாங்கி வந்த தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியால் அடுத்து நடிக்க உள்ள புதிய படங்களுக்கு ரூ.30 கோடி சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவரிடம் சம்பளத்தை குறைக்கும்படி தயாரிப்பாளர்கள் நிர்ப்பந்தித்து வருவதாக கூறப்படுகிறது.