புதிய கொரோனா நோயாளிகள் எவருமில்லை: இரண்டாவது நாளாக சாதித்த சீனா

கொரோனா வைரஸ் பரவல் உருவானதாக கூறப்படும் வுஹான் நகரம் மட்டுமின்றி ஒட்டுமொத்த சீனாவிலும் இரண்டாவது நாளாக புதிய நோயாளிகள் எவரும் கண்டறியப்படவில்லை என அரசு அறிவித்துள்ளது.

பெரும்பாலான உலக நாடுகளை முடக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணமாக கருதப்படும் வுஹான் நகரத்தில் கடந்த இரு நாட்களாக புதிய நோயாளிகள் எவரும் கண்டறியப்படவில்லை.

சீன அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளின் பலனாக இந்த நகரில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

அங்கு நேற்றைய நிலவரப்படி தொடர்ந்து 2-வது நாளாக புதிதாக யாரும் இந்த தொற்றுக்கு ஆளாகவில்லை.

இருப்பினும் வுஹானைச் சேர்ந்த 50,005 பேர் தொடர்ந்து கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றும் கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர்.

வுஹான் நகரம் மட்டுமின்றி ஒட்டுமொத்த சீனாவிலும் 2 நாட்களாக புதிய நோயாளிகள் யாரும் இல்லை என அரசு அறிவித்து உள்ளது.

நேற்று 3 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மரணமடைந்ததை தொடர்ந்து, மொத்த இறப்பு எண்ணிக்கை 3,248 என அதிகரித்துள்ளது.

உள்நாட்டு மக்கள் யாரும் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகாத நிலையில், வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு வருபவர்கள் வைரஸ் தொற்றுடன் வரும் விவகாரம் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில் 39 பேர் கொரோனா பாதிப்புக்கு இலக்காகி உள்ளனர் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

இதன்மூலம் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 228 என அதிகரித்து உள்ளது.

முகநூலில் நாம்