புதிய கூட்டணி தொடர்பில் ஆராய மீண்டும் சந்திக்கின்றன மொட்டு கட்சியும் ஐ.தே.கவும்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையிலான
முக்கிய சந்திப்பொன்று இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெறவுள்ளது.

இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு புதிய கூட்டணியை உருவாக்கி பொதுச்
சின்னத்தில் போட்டியிடுவது போன்ற விடயங்களில் பொதுவான இணக்கப்பாடு
இதன்போது எட்டப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இன்றைய கலந்துரையாடலில் தம்முடன் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன
கலந்துகொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித
ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர்
சட்டத்தரணி சாகர காரியவசம், ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே
மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோர் இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்க
உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில்
கடந்த ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது என்பதுக்
குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்