புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அலெக்ஸ் கேரி!

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான அலெக்ஸ் கேரி, அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியுடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியுடன் இணைந்த கேரி, புதிய ஒப்பந்தத்தின் பின்னர் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அணியுடன் விளையாடுவதை உறுதிசெய்துள்ளார்.

இதுகுறித்து 29 வயதான அலெக்ஸ் கேரி கூறுகையில், ‘அடுத்த நான்கு ஆண்டுகளில் எனது சொந்த அணியாக ஸ்ட்ரைக்கருக்காக விளையாடுவதை எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னால் அடிலெய்ட் ஓவலில் விளையாடுவது நம்பமுடியாத உணர்வு, இந்த பருவத்தை தொடர முடியும் என்று நான் நம்புகிறேன்’ என கூறினார்.

அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் துணைத்தலைவரான அலெக்ஸ் கேரி, அணிக்காக 35 போட்டிகளில் விளையாடி 1,163 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதில் ஒரு சதம், ஆறு அரைசதங்கள் அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்