புசல்லாவையில் மீட்கப்பட்ட சிறுத்தை வனப் பகுதிக்கு அனுப்பி வைப்பு!

புசல்லாவை – ஹெல்பொட தோட்டத்தில் மீட்கப்பட்ட சிறுத்தை இயற்கை வனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பின்னர், வழங்கப்பட்ட உத்தரவின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறுத்தையின் உடல்நிலை தற்போது தேறியுள்ளதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

சிறுத்தை விடுவிக்கப்பட்ட இடம் தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

புசல்லாவை – ஹெல்பொட தோட்டத்தில் இரண்டு சிறுத்தைகள் பொறிக்குள் சிக்கிய நிலையில் நேற்று மீட்கப்பட்டதுடன் அவற்றில் ஒன்று உயிரிழந்தது.

உயிரிழந்த சிறுத்தையின் உடற்கூற்று பரிசோதனையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்