புகையிரத பயணிகளுக்கு ஓர் அறிவிப்பு! இன்று முதல் கொண்டு வரப்படும் நடைமுறை

புகையிரத ஆசன அனுமதிச் சீட்டுக்களின் முன்கூட்டிய பதிவு தொடர்பில் புகையிரத பயணிகளுக்கு அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கம் குறிப்பிடப்பட்ட அனுமதிச் சீட்டை கொண்டுள்ளவர்களுக்கு தொடருந்து திணைக்களத்தின் விதிமுறைகளுக்கு அமைய ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து பயணிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, தங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கம் அனுமதிச்சீட்டில் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை பயணிகள் சரிபார்த்து கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, புகையிரத பயணங்களின் போது முன்கூட்டியே ஒதுக்கப்பட்ட ஆசனங்களுக்கான அனுமதி சீட்டுக்களை சோதனைக்கு உட்படுத்தும் நடைமுறை இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், தேசிய அடையாள அட்டை இல்லாத அதாவது 18 வயதிற்கு உட்பட்டோருக்காக மேற்கொள்ளப்படும் புகையிரத ஆசன அனுமதி சீட்டுக்களின் முன்கூட்டிய பதிவுகளின் போது பெற்றோரின் அடையாளப்படுத்தல் பத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்