
புகையிரத கட்டண திருத்தம் இன்று (23) முதல் அமுலுக்கு வரும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.
இதன்படி 10 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச கட்டணத்தை 20 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
பயணிகள் போக்குவரத்தைத் தவிர, சரக்கு போக்குவரத்திற்கான கட்டணங்களும் திருத்தப்பட்டுள்ளன.
புகையிரத கட்டணம் பஸ் கட்டணத்தில் பாதியாக இருக்கும் வகையில் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், புதிய புகையிரத கட்டண திருத்தத்தை அமுல்படுத்துவதை தவிர்த்துக் கொள்வதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.