
இன்று (18) காலை காலி – மாகல்ல அனுலாதேவி பெண்கள் கல்லூரிக்கு அருகில், சமிஞ்ஞையை மீறிச் சென்ற கார் ஒன்று புகையிரதத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
காரில் பயணித்த கர்ப்பிணி பெண் மற்றும் இரண்டு சிறு பிள்ளைகள் உட்பட 6 பேர் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காரில் இருந்தவர்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது.
விபத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.