பிளாக் பஸ்டர் ஹிட் படத்தின் ரீமேக்கில் தனுஷ்? உற்ச்சாகத்தில் ரசிகர்கள்..

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர். இவரின் நடிப்பில் வெளியான அசுரன், பட்டாஸ் போன்ற திரைப்படங்களின் வெற்றியால் உற்சாகத்தில் உள்ளார்.

கடந்த 2011ல் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படம் மிக பெரிய வெற்றி அடைந்தது. மேலும், அப்படத்தில் நடித்தற்காக தனுஷிற்கும், தயாரிப்பாளர் கதிர்ரேசனுக்கும் தேசிய விருது கிடைத்தது.

இந்நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் ரீமேக் உரிமத்தை ஆடுகளம் திரைப்படத்தை தயாரித்த கதிரேசன் கைப்பற்றி உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

மேலும், அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்த கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது.

அப்படத்தில் நடிகர் பிரித்விராஜ் தாடி வைத்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், அது நடிகர் தனுஷிற்கு பொருத்தமாக இருக்கும் என்றும் இன்னொரு 56 வயதான போலிஸ் அதிகாரியின் கதாபாத்திரத்தில் வேறு ஒருவரை நடிக்க வைக்க உள்ளார்கள் எனவும் கூறப்படுகிறது.

முகநூலில் நாம்