பில் கேட்ஸ் தனது மொத்த சொத்தையும் தானமாக வழங்க உள்ளது 

தனது மொத்த சொத்தையும் அறக்கட்டளைக்கு தானமாக வழங்கவுள்ளதாக உலகின் முன்னணி செல்வந்தர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 20 பில்லியன் அமெரிக்க டொலரை அவர் தானமாக வழங்க தீர்மானித்துள்ளார்

உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வௌியேற விரும்புவதாகவும் பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த செல்வந்தரான பில் கேட்ஸ் கடந்த 1995 முதல் 2017 வரையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.

இதில் 2010 முதல் 2013 வரையில் அவர் முதலிடத்தை இழந்திருந்தாலும் உலகிலுள்ள செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் ஆதிக்கம் செலுத்தியுள்ளார்.

தற்போதைய உலக பணக்காரர்களின் வரிசையில் ஐந்தாவது இடத்தில் பில் கேட்ஸ் உள்ளார்

அவர் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூக நலத்திட்டங்களை உலகளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்