
பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை பதிவு செய்வதில் மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என, பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்து மூன்று மாத காலப்பகுதியில் பிரதேச செயலகம் ஊடாக பதிவுகளை மேற்கொள்ள முடியுமெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனாவால் ஒட்டுமொத்த நடவடிக்கைகளும் முடங்கிப்போயுள்ளன.
இந்த காலப்பகுதியில் நிகழும் பிறப்புக்கள் மற்றும் இறப்புக்கள் தொடர்பில் பதிவு செய்வது குறித்து ஏற்பட்ட குழப்பத்திற்கு தற்போது பதில் வழங்கப்பட்டுள்ளது.