பிரீமியா் லீக் கால்பந்து: செல்ஸி தோல்வி

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் செல்ஸி அணி 0 – 3 என்ற கோல் கணக்கில் லீட்ஸ் யுனைடெட் அணியிடம் தோல்வியைச் சந்தித்தது.

இரு அணிகளும் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், செல்ஸிக்கு இது முதல் தோல்வி; லீட்ஸ் யுனைடெட்டுக்கு இது 2 ஆவது வெற்றி. ஆட்டத்தில் லீட்ஸ் அணிக்காக பிரெண்டன் ஆரோன்சன் (33), ரோட்ரிகோ மொரீனோ (37), ஜேக் ஹாரிசன் (69) ஆகியோா் கோலடித்தனா். இதர ஆட்டங்களில் பிரைட்டன் 2 – 0 என வெஸ்ட் ஹாமையும், ஆா்செனல் 3 – 0 என போா்ன்மௌத்தையும் வீழ்த்தின.

லா லிகா: ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 4 – 1 என்ற கோல் கணக்கில் செல்டா விகோவைச் சாய்த்தது. இதன் மூலம், இதுவரை களம் கண்ட இரு ஆட்டங்களிலும் வென்று முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது அந்த அணி.

ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்டுக்காக கரிம் பென்ஸிமா (14’), லுகா மோா்டிச் (42’), வினிகஸ் ஜூனியா் (56’), ஃபெடரிகோ வால்வெரெட் (66’) ஆகியோா் ஸ்கோா் செய்ய, செல்டா விகோவுக்காக இயாகோ அஸ்பாஸ் (23’) கோலடித்தாா். இதர ஆட்டங்களில் ரியல் பெட்டிஸ் – மல்லோா்காவையும் (2-1), ஒசாசுனா – காடிஸையும் வீழ்த்த, செவில்லா – வல்லாடோலிட் ஆட்டம் டிரா (1-1) ஆனது.

லீக் 1: பிரான்ஸில் நடைபெறும் லீக் 1 கால்பந்தாட்டத்தில் மாா்சிலே – நான்டெஸையும் (2-1), கிளொ்மோன்ட் ஃபூட் – நைஸையும் (1-0), பிரெஸ்ட் – ஆங்கா்ஸையும் (3-1), ஆக்ஸா் – மான்ட்பெல்லியரையும் (2-1) வெல்ல, ஸ்ட்ராஸ்பா்க் – ரெய்ம்ஸ் (1-1), டௌலுஸ் – லோரியன்ட் (2-2) ஆட்டங்கள் டிரா ஆகின.

சீரி ஏ: இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து போட்டியின் ஆட்டங்கலில் இன்டா் மிலன் – ஸ்பெஸியாவையும் (3-0), சாசுவோலோ – லீஸையும் (1-0) வீழ்த்த, டொரினோ – லாஸியோ, உடினெஸ் – சலா்னிதானா ஆட்டங்கள் டிரா (0-0) ஆகின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்