பிரிஸ்பேன் அணிக்கெதிரான போட்டியில் மெல்பேர்ன் அணி சிறப்பான வெற்றி!

பிக் பேஷ் ரி-20 தொடரின் இரண்டாவது லீக் போட்டியில், மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

கன்பெர்ரா மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணியும் பிரிஸ்பேன் ஹீட் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பிரிஸ்பேன் ஹீட் அணி, 19.5 ஓவர்கள் நிறைவில் 125 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டொம் கூப்பர் 26 ஓட்டங்களையும் மேக்ஸ் பிரையன்ட் மற்றும் கிறிஸ் லின் ஆகியோர் தலா 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சில், குல்டர் நைல் 4 விக்கெட்டுகளையும் டில்பார் உசைன் 2 விக்கெட்டுகளையும் ஹின்ச்லிஃப் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 126 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி, 17.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹில்டன் கார்ட்லைட் ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களையும் க்ளென் மேக்ஸ்வெல் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பிரிஸ்பேன் அணியின் பந்துவீச்சில், ஜெக் வுட் 2 விக்கெட்டுகளையும் சேவியர் பார்ட்லெட் மற்றும் மத்தியு குஹ்மேன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 4 விக்கெட்டுகளை சாய்த்த குல்டர் நைல் தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்