பிரித்தானியா முடக்கப்பட்டது: இரண்டுக்கு மேற்பட்டவர்கள் ஒன்றுகூடத் தடை

பிரித்தானியாவில் பிரதமர் போரிஸ் ​ஜோன்சன் அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளுடன், முடக்கல் நடைமுறைக்கு வந்துள்ளது.

போரிஸ் ​ஜோன்சனின் தொலைக்காட்சி உரையைத் தொடந்து, பிரித்தானியா முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகளின் கீழ், உடற்பயிற்சி செய்வதற்காக மாத்திரம் நாளொன்றுக்கு ஒரு தடவை மக்கள் வீட்டை விட்டு வௌியேற அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மிகவும் அவசியமாக இருப்பின் மாத்திரம் பணிக்குச் செல்வதற்கும் வீடு திரும்புவதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபார நிலையங்கள் மாத்திரமே திறந்திருக்க முடியுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்தியாவசியமல்லாத பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உட்பட ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட வேண்டுமென பணிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாக வசிப்பவர்களைத் தவிர, இரண்டுக்கு மேற்பட்டவர்கள் ஒன்றுகூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்