
பிரிட்டிஷ் விமானச் சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை, ரஷ்யா நீடித்துள்ளது.
பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டு ரஷ்யாவிலும் பரவியுள்ள புதுவகை கொரோனா தொற்றே இதற்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஏப்ரல் 16 நள்ளிரவு வரை, தடை நீடிக்கப்படுவதாக ரஷ்யாவின் கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான பணிக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த வரும் டிசம்பர் 22ஆம் திகதி முதல் இவ்வாறு குறித்த தடை நீடிக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, எளிதில் பரவக்கூடிய புதுவகை கொரோனாவினால் ரஷ்யாவில், 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.