பிரிட்டன் பிரதமர் மக்களுக்கு கடும் எச்சரிக்கை

பிரிட்டனில் அண்மைய சில தினங்களாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து வரும் நிலையில் சமூக நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களில் 6 பேருக்கு மேல் கூடக்கூடாது, மீறினால் அபராதம் விதிக்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

எதிர்வரும் செப்ரெம்பர் 14 முதல் இந்த கட்டுப்பாடு அமுலுக்கு வரவுள்ளது.

இதன்படி நண்பர்கள் அல்லது குடும்ப சந்திப்புகளில் இந்த எண்ணிக்கையை மீறினால் முதலில் இந்திய மதிப்பில் 9,500 ரூபாயும் அடுத்தடுத்து மீறினால் ரூ 3 லட்சத்து 4 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இதற்கான சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஆனால், பள்ளிகள், வேலையிடங்கள் கொரோனா பாதுகாப்புடன் நடக்கும் திருமண நிகழ்ச்சிகள், இறுதிச்சடங்குகள் போன்றவற்றிற்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

ஜூலை மாத இறுதியில் பிரிட்டனில் கொரோனா தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழே இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக இரண்டாயிரத்தை கடந்து வருவதால் அரசு இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்