பிரிட்டன் அரசி எலிசபெத் புதிய சாதனை

உலகில் மிக நீண்ட காலம் அரச பதவியை வகித்த இரண்டாமவா் என்ற பெருமையை பிரிட்டன் அரசி எலிசபெத் (96) ஞாயிற்றுக்கிழமை பெற்றாா்.

பிரான்ஸில் கடந்த 1643 முதல் 1715 வரை ஆட்சி செய்த 14 ஆம் லூயிஸுக்கு அடுத்தபடியாக, அரசி எலிசபெத் அதிக காலத்துக்கு அரச பதவியை வகிப்பவராகியுள்ளாா்.

கடந்த 1927 முதல் 2016 ஆம் ஆண்டு வரை (70 ஆண்டுகள் 126 நாள்கள்) ஆட்சி செய்த தாய்லாந்து மன்னா் பூமிபோல் அதுல்யதேஜை பின்னுக்குத் தள்ளிவிட்டு, இரண்டாவது இடத்தை அரசி எலிசபெத் பெற்றுள்ளாா்.

கடந்த 1953 ஆம் ஆண்டு மகுடம் சூட்டிய எலிசபெத், பிரிட்டனின் மிக நீண்டகால முடியாட்சியாளா் என்ற பெருமையை கடந்த 2015 ஆம் ஆண்டு பெற்றாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்