
நடிகர் விஷாலுக்கு தற்போது 45 வயதாகிறது. அவர் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் தான் இருக்கிறார். அவருக்கு ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், சில காரணங்களால் திருமணம் நின்றுவிட்டது.நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பிறகு தான் திருமணம் செய்வேன் என தொடர்ந்து கூறி வருகிறார் விஷால். மேலும் திருமணம் பற்றி அவரிடம் சில வருடங்களுக்கு முன்பு கேள்வி எழுப்பிய போது ஆர்யா திருமணம் செய்யட்டும் அதன் பின் நான் செய்கிறேன் என பதில் கூறுவார். ஆனால் தற்போது ஆர்யாவுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது. தற்போதும் விஷால் திருமணம் செய்யவில்லை. சமீபத்தில் இது பற்றி கேட்டதற்கு தற்போது பிரபாஸ் திருமணம் செய்யட்டும், அதே நாளில் நானும் திருமணம் செய்துகொள்கிறேன் என கூறி சமாளித்து இருக்கிறார்.