பிரபல இசையமைப்பாளரை “கணவர்” என நடிகர் பாலாவின் முன்னாள் மனைவி அம்ரிதா

பிரபல இசையமைப்பாளரை கணவர் என நடிகர் பாலாவின் முன்னாள் மனைவி அம்ரிதா அறிவித்துள்ளார்.

இயக்குநரின் சிறுத்தை சிவாவின் தம்பியும் நடிகருமான பாலாவின் முன்னாள் மனைவி அம்ரிதா சுரேஷ். பாடகியான அம்ரிதா மலையாளத்தில் நிறைய பாடல்களைப் பாடியுள்ளார்.

கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்த நடிகர் பாலாவும், அம்ரிதாவும் கடந்த ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்றனர்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் கோபி சுந்தரை அம்ரிதா சுரேஷ் காதலித்துவருவதாக கிசு கிசுக்கப்பட்டது. அதற்கேற்ப இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வந்தனர்.

மலையாள இசையமைப்பாளரான கோபி சுந்தர் தமிழில் தோழா, பெங்களூர் நாட்கள் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் அம்ரிதா சுரேஷ் தனது பிறந்த நாள் கொண்டாட்ட படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இசையமைப்பாளர் கோபி சுந்தர், அம்ரிதா சுரேஷின் சகோதரி அபிராமி உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

அம்ரிதா தனது பதிவில், கோபி சுந்தர், ´´உனக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகளில்லை. எனக்கு இது மிகவும் சிறப்பான பிறந்த நாள். என் கணவரே, நீ சிறப்பானவர் . நன்றி´´ என்று குறிப்பிட்டுள்ளார். கோபி சுந்தரை அம்ரிதா கணவர் என குறிப்பிட்டுள்ளதால் இருவருக்கும் திருமணம் முடிநத்ததா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்