பிரத்தியேக வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க யோசனை!

பிரத்தியேக வகுப்புகளில்100 மாணவர்கள் என மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்களை விட அதிகமான மாணவர்களை இணைத்துக்கொள்வது குறித்து, அமைச்சரவையில் கவனம் செலுத்தப்பட்ட அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ந​டைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

இடப் பிரச்சினைகள் காணப்படும் பிரத்தியேக வகுப்புகளுக்களில் 100 மாணவர்களுக்கு மேலதிகமாக மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்