பிரதமர் மஹிந்த சாய்ந்தமருதுக்கு விஜயம்!

முன்னாள் உயர் கல்விப் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவின் அழைப்பின் பேரில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நாளை மறுதினம் (23) சாய்ந்தமருது பிரதேசத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் மயோன் ரிஸ்லி முஸ்தபாவை ஆதரித்து, சாய்ந்தமருது பௌஸி விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரசார பொதுக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காகவே, அவர் சாய்ந்தமருதுக்கு விஜயம் செய்கிறார்.

முகநூலில் நாம்