பிரதமர் நரேந்திர மோடி மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம்மை சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடி மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம்மை சந்தித்து கலந்துரையாடிய போது சமாதானத்தை மையப்படுத்திய மாலைதீவுடனான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளார்.

பரஸ்பர பாதுகாப்பு சவால்கள் மற்றும் அந்தந்த பிரதேசங்களை அச்சுறுத்தலான விடயங்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்பதை இரு தரப்பும் ஒப்புக்கொண்டனர்.

சீனா தனது கால்தடங்களை அதிகரிக்க எடுத்த முயற்சிகளில் சமீபத்திய பின்னடைவுகளை காண கூடியதாக உள்ளது. குறிப்பாக அண்டை நாடான இலங்கையில் ராஜபக்ஷர்களின் விலகல்கள் குறிப்பிடத்தக்கது.

நாடுகடந்த குற்றம், பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றைக் கண்டறிதல் முக்கியமாகின்றது. இந்தியப் பெருங்கடலுக்கு  கடுமையான அச்சுறுத்தல்களாக இவை இருப்பதால், மாiலதீவை நெருங்கிய தொடர்புக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இந்தியாவிற்கும் மாலைதீவுக்கும் இடையே பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான ஒருங்கிணைப்பு முழு பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார். இந்தியா 24 வாகனங்களை வழங்கும். 61 தீவுகளில் பொலிஸ் வசதிகளை உருவாக்க இந்தியாவும் ஒத்துழைப்பு வழங்கும்.

இந்தியாவும் மாலைதீவுகளும் 6 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதுடன் பரந்துபட்ட ஒத்துழைப்புகள் குறித்து இரு தரப்பு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்