
பிபிலை பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் காணியில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கும் போது, குறித்த காணி உரிமம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
குறித்த சர்ச்சை தொடர்பான கண்காணிப்பு மற்றும் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பிபிலை பிரதேச செயலாளர் யூ.என். வீரசிங்கவின் தலைமையில் ஐவர் அடங்கிய விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவானது ஒரு மாதத்துக்குள் அது தொடர்பான அறிக்கையை கையளிக்க வேண்டும் என்றும் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் இந்த கலந்துரையாடலின் போது, அறிவுறுத்தியுள்ளார்.
இந்த சிக்கல் நிலை தொடர்பில் பொதுமக்களுக்கான சேவையை உரிய முறையில் நிறைவேற்ற முடியாமல் இருப்பதுடன், அரச வருமானமும் இழக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் எம்.எம். விஜயநாயக்க, மாகாண போக்குவரத்து மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.